Mnadu News

கரூரில் வெற்றி யாருக்கு?தம்பிதுரை vs ஜோதிமணி

இந்திய மக்களுக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காங்கிரஸா பாஜகவா என்ற இடியாப்ப சிக்கல் நிலவி வரும் சூழலில் தமிழக மக்களவைத் தேர்தலில் புதிய அத்தியாயத்தை முனைய காங்கிரஸும் அதிமுகவும் பலபரீட்சை நடத்துகிறது.

கரூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல் தர்பாரில் அதிமுகவும் , காங்கிரஸும் தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன. 7 வது வெற்றி யாருக்கு என்ற நிலை உள்ளதால் தான் திமுக  வேட்பாளர் சின்னச்சாமி போன்ற மக்களுக்கு பரிட்சையமான வேட்பாளர்கள் திமுக பக்கம் இருக்கையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கரூர் தொகுதி தாரை வார்க்கப்பட்டு இருக்கிறது.

இதனால் இங்கு இருமுனைப் போட்டி நிலவி வருகிறது. இந்திய மக்களவையில் துணை சபாநாயகர் தம்பிதுரை அதிமுக கூட்டணியில் சார்பில் கரூரில் களம் காணுகிறார். 25 ஆண்டுகால அரசியல் பயணம், அரசியல் துறவு வாழ்க்கை, நற்பெயர் இதை மட்டுமே முதலீடாக கொண்டு திமுக காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளராக ஜோதிமணி களம் காணுகிறார். அமமுக சார்பில் தங்கவேல் போட்டியிடுகிறார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் ஜவுளித் தொழிற்சாலை, பாய்லர் தொழிற்சாலை, விவசாயம், பாடி ஃபில்டிங் போன்ற தொழில்களை மையமாகக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் ஒரே ஒரு முறை மட்டும் கேசி பழனிச்சாமி 2004ம் ஆண்டு மட்டும் கேசி பழனிச்சாமி திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும் அவர் தற்போது அதிமுகவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றபடி அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக வலம்வரும் கரூர் தொகுதியில் 4 முறை வெற்றி பெற்ற தம்பிதுரையை எதிர்த்து மக்களுக்கு பரிட்சையம் இல்லாத  ஜோதிமணியை களம் இறக்கியிருக்கிறது காங்கிரஸ் கூட்டணி.

அதிமுக பாஜக வெறுப்புநிலை மக்களிடம் வெகுவாகக் காணப்பட்டாலும் ஓட்டு வங்கி இல்லாத ஜோதிமணியைக் களத்தில் இறக்கி திமுக கூட்டணிக்கு கவலையை அளித்திருக்கிறது. காங்கிரஸ் மேலிடம். கடைசியாக போட்டியிட்டு ஜோதிமணிப் பெற்ற வாக்குகளே இதற்கு சாட்சியாக முன்வைக்கப்படுகிறது.

கரூர் தொகுதியை காங்கிரஸிற்கு தாரை வார்த்துவிட்டு விரக்தியில் இருக்கும் திமுகவினருக்கு ஒரே ஒரு ஆறுதல் அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி தான். கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜிக்கென கணிசமான ஓட்டு வங்கி இருக்கிறது.

திமுகவின் ஓட்டு வங்கி, அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியின் சப்போர்ட்ர்ட், பாஜக எதிர்ப்பு நிலை போன்றவை மட்டுமே ஜோதிமணியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும்.  அதே சமயம் அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியின் வெறுப்பு நிலையை கட்டாயம் அமமுகவினர் காட்டுவார்கள்.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடுகிற தம்பிதுரை இதே தொகுதியில் 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இம்முறையை ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் முயற்சியில் களம் இறங்கியிருக்கிறார்.

மேலும் விராலிமலை, மணப்பாறை  தொகுதியில் சட்டமன்றத் தொகுதி உருவாகியதிலிருந்து இரண்டு முறை தேர்தலைச் சந்தித்தது. அந்த இரண்டிலும் முறையே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர் சந்திரசெகர் போன்றோர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றனர்.

தொகுதியில் வளர்ச்சி கேள்விக்குறியாக இருந்தாலும்  மக்களின் மனநிலையை ஏற்று பணியாற்றி வருவதால் இந்த இரண்டு தொகுதிகளில் மற்ற கட்சிகள் நுழையவே முடியாது.

அதோடு கிருஸ்ணராயபுரம் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவே ஆட்சியில் இருந்து வருகிறது. கரூர் சட்டமன்றத் தொகுதியும் எம் ஆர் விஜபாஸ்கர் வசம் இருக்கிறது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் 4ல் அதிமுக வசம் இருக்கிறது. இதனால் பணப்பட்டுவாடாவில் இருந்து அனைத்து உக்திகளையும் அதிமுக நடைமுறைப்படுத்த சாதகமான சூழல் இருக்கிறது.

ஒருவேளை திமுக சார்பில் யாரேனும் இத்தொகுதியில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வெற்றி என்று அரிதியிட்டுக் கூறமுடியும். பாஜக மோடி எதிர்ப்பு நிலைக் கூட இந்தத் தொகுதியில் செல்லாக் காசு தான் எனபது திமுகவுக்கு கவலை அளிக்கக்கூடிய தகவலாக இருக்கிறது.

தம்பிதுரையின் மீது மக்கள் வெறுப்பு நிலையை திமுக சரிவரக் கையாண்டால் மட்டுமே ஜோதிமணி வெற்றியை எளிதாக்க முடியும். இதோடு அமமுகவின் ஓட்டுப்பிரிப்பு உக்தி ஒரு வேளை வேலை செய்தால் ஜோதி மணி வெற்றியை நினைத்துப் பார்க்கலாம். இவையாவும் வேலை செய்யாவிட்டால் ஜோதிமணி தோல்வியைச் சந்திக்கும் நிலை இருக்கிறது.

கடந்த கால வரலாறுகள் புள்ளி விவரங்கள், சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகளை வைத்துப் பார்க்கையில் கரூர் மக்களவைத் தொகுதியில் தம்பிதுரையின் ஹாட்ரிக் வெற்றி பெற்று வரலாற்று சாதனையை அதிமுக படைக்க இருக்கிறது.

Share this post with your friends