குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் தவறி விழுந்த பெண் பயணியை, ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.அகமதாபாத் ரயில் நிலையத்துக்கு அவரது உடைமைகளுடன் ஓடோடி வந்த பெண் பயணி ஒருவர், ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்ட நிலையிலும் அவசர அவசரமாக ஆபத்தான முறையில் ஏற முயன்றார்.
ஆனால் ரயில் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிய அந்த பெண்மணி தண்டவாளத்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். இதனை பார்த்த ரயில்வே போலீசார் மற்றும் பொதுமக்கள்,உடனடியாக விரைந்து சிந்தித்து செயல்பட்டு பெண்ணை மீட்டனர்.