திருச்சி, திருவானைக்காவல் அருகே உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 432 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் கடந்த 10 நாட்களாக தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது.இந்நிலையில், கொள்ளிடம் ஆற்றங்கரையில் வசித்தும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்ததால், ஆத்திரமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கொள்ளிடம் செக்போஸ்ட் அருகே நடைபெற்ற இந்த சாலை மாறியலால் சிறுது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் -தொல்.திருமாவளவன்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மண்டல கூட்டம் அதன் தலைவர் தொல்.திருமாவளவன்...
Read More