Mnadu News

X அறிமுகம் செய்யும் புதிய அம்சம்! பயனர்கள் மகிழ்ச்சி!

எலான் மஸ்க் கடந்த வருடம் அக்டோபர் மாதம் X நிறுவனத்தை வாங்கி பொறுப்பேற்றது் முதல் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறார். இது தான் தற்போது வரை பேசுபொருளாக மாறி வருகிறது. அப்படி, முதலில் அவர் மாற்றங்களை செய்ய துவங்கியதும், பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல் வெடித்தது. 

பணியாளர்களை நீக்கியது முதல் தற்போது நடைமுறையில் உள்ள பணம் செலுத்திய சந்தாதாரர்களுக்கு மட்டுமே ப்ளூ டிக் சொந்தம் வரை சொல்லலாம். இப்படி பல அதிரடி அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் X ஒரு புதிய மகிழச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது X-ன் டிசைன் என்ஜினியர் ஆண்டரீயா கான்வே இந்த அப்டேட் குறித்து தகவல் வெளியிட்டு உள்ளார்.

ஆம், பயனர்கள் இனி தங்கள் மொபைல் எண்களைப் பகிராமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதை, பயனர்கள் ஷேட் பக்கத்தில் இந்த அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதையும் லிண்டா உறுதிப்படுத்தினார்.

X-ன் டிசைன் என்ஜினியர் ஆண்டரீயா கான்வே, ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி கொண்ட புதிய DM மெனு படத்தைப் பகிர்ந்துள்ளார். சோதனை முயற்சியில் உள்ள இந்த அம்சம் இன்னும் சில நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this post with your friends