Mnadu News

யோகி பாபுவுக்கு அம்மாவாக நடிக்கும் பிரபல நடிகை

பாரதிராஜாவின் ‘கடலோர கவிதைகள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேகா. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்தில் யோகி பாபுவுக்கு அம்மாவாக நடிகை ரேகா நடித்து வருகிறார். எமலோகத்தை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் ஜனனி அய்யர், ராதாரவி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.வரும் மே மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends