Mnadu News

முகநூல் மூலம் ஒன்று திரண்டு ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்கள்

சமூக வலைதளங்கள் மூலம், ஆதரவற்றோருக்கு உதவ முடியும் என்பதை செயல்படுத்தி காட்டி உள்ளனர், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் சிலர். உணவை வீணாக்காதீர்கள் என்ற முழக்கத்துடன் முகநூலில் குழுவை தொடங்கிய இவர்கள், ஆரம்பத்தில் தங்களது பிறந்தநாளின்போது, ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதை தொடர முடிவெடுத்தனர். “நோ வேஸ்ட் ஃபுட் இன் பாண்டி” என்ற பெயரில் ஒரு குழுவாக இணைந்த இந்த இளைஞர்கள், திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா என சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை எல்லாம் தேடிச் சென்று அங்கு மீதமாகும் உணவை நேரில் பெற்றனர். அவற்றை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி, தங்களது இருசக்கர வாகனங்கள் மூலம் எடுத்துச்சென்று சாலையோரத்தில் வசிப்பவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு நாள்தோறும் வழங்கி வருகின்றனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More