காட்டுமன்னார்கோவில் அருகேஉத்திரைசோலை கிராமத்தைச் சேர்ந்த வினோத், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அவர் காட்டுமன்னார் கோவில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வினோத் உயிரிழந்தார். அதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் காவல்துறையினரை கண்டித்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட எஸ்.பி அபிநவ் விசாரணை மேற்கொண்டனர். அதில் தலைமைக் காவலர் பாவாடைசாமியை பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள், காவல் ஆய்வாளர் ரவீந்திரநாத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அங்கு பதற்றம் நிலவும் சூழலில், பாதுகாப்பு பணிக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More