சமயநல்லூர் அருகே உள்ள டபேதார் சந்தை பகுதியை சேர்ந்தவர் நிருபன் சக்கரவர்த்தி. இவர், வீடுகளில் வண்ணம் தீட்டப் பயன்படும் சுண்ணாம்பு பவுடர் ஆலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை நிருபன் சக்கரவர்த்தி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீடு புகுந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றது.
அவரது இரு கைகளும் மணிக்கட்டுகளோடு துண்டாக்கப்பட்டன. தடுக்க வந்த அவரது மனைவி பிரேமாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற சமயநல்லூர் போலீசார், நிருபன் சக்கரவர்த்தியின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்