மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் வேலுச்சாமி ஆகிய இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனால், அந்த சிறுமி 2 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். குழந்தை பிறந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது என இருவரும் சிறுமியை மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், குழந்தைகளை மீட்ட காவல்துறையினர், தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் குழந்தைகளை அரசிடம் ஒப்படைத்தனர். மேலும், சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வேலுச்சாமியை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர். பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More