Mnadu News

Uncategorized

வேங்கைவயல் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு.

புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர்தொட்டியை அசுத்தம் செய்த நபர்களை கைது செய்ய கோரிய மனு, பொறுப்பு தலைமை ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள், சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேல் ஆகியும் வழக்கு விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பதால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். இந்த சம்பவம் …

வேங்கைவயல் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு. Read More »

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது.அதே வேளையில், மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு பொதுவாக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மாலை 6 மணியுடன், வாக்குப்பதிவுக்கான நேரம் முடிந்துவிட்டது. ஆனாலும் மாலை …

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு. Read More »

ஹூண்டாயின் 2வது மின்னணு கார் அறிமுகம்: ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 கி.மீ. மைலேஜ்.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 16வது ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த புதிய ரக கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.அந்தவகையில் தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், அயோனிக் 5 இவி என்ற மின்னணு கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஹ_ண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது மின்னணு கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.72.6 kWh திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 631 கிலோ மீட்டர் …

ஹூண்டாயின் 2வது மின்னணு கார் அறிமுகம்: ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 கி.மீ. மைலேஜ். Read More »

பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா மறுப்பு.

ரஷியா – உக்ரைன் போருக்கு பிறகு, ரஷியாவிடம் இருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் சில நாடுகள் ஏற்கனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டுள்ளன. ரஷியா நஷ்டத்தினை தவிர்க்கும் வகையில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாக அறிவித்தது. இதன் காரணமாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்தியாவுக்கு குறைந்த …

பாகிஸ்தானுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா மறுப்பு. Read More »

நம்பிக்கை துரோகம் செய்தது யார்..? ஓ. பன்னீர்செல்வம்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: தேவர் தங்க கவசம் குறித்த கேள்விக்கு: தங்க கவசத்தை பொருத்தமட்டில் அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது நீதிமன்றம் கருத்துறை அடிப்படையில் நாங்கள் முடிவெடுப்போம். ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை குறித்த கேள்விக்கு: ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையின் அடிப்படையில் சிலர் நீதிமன்றத்திற்கு போவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே இந்த …

நம்பிக்கை துரோகம் செய்தது யார்..? ஓ. பன்னீர்செல்வம் Read More »

நெல்லையில் அமோகமாக நடைபெற்று வரும் கால்நடை விற்பனை

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. அதில் சிறிய குட்டி ஆடு 3000 ரூபாய் முதல் பெரிய ஆடு 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இறைச்சி கடை வியாபரிகள் கால்நடை சந்தையில் குவிந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளிலும் நாட்டுக்கோழி, வாத்து …

நெல்லையில் அமோகமாக நடைபெற்று வரும் கால்நடை விற்பனை Read More »

தலை மேல் தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் நூதன வழிபாடு;

கிருஷ்ணகிரி; ஓசூர் அருகே உள்ள இடையநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சம்பன்னி பீரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் புரணமைக்கப்பட்டு தற்போது புதிய கோயிலாக கட்டப்பட்டுள்ளது. புதிய கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து திருவிழாவின் ஒரு பகுதியாக தலை மேல் தேங்காய்கள் உடைக்கும் வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில், சம்பன்னி பீரேஸ்வரர், ஈரம்மா, ராமாதேவரு, வீரபத்திர சுவாமி, சிக்கம்மா, தொட்டம்மா உள்ளிட்ட பல்வேறு கிராம தெய்வங்கள் மேளதளங்கள் முழங்க தலைமையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு …

தலை மேல் தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் நூதன வழிபாடு; Read More »

பச்சை நிறமாக மாறிய கடல்; அச்சத்தில் மீனவர்கள்..!

தூத்துக்குடி துறைமுக கடற்கரை பூங்கா பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மூலமாக மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் துறைமுக பூங்கா பகுதியில் noctiluca நோக்டிலுக்கா என்ற வகை கடல்பாசி அதிகமாக அளவில் கடலில் கலந்ததையடுத்து கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இதுபோன்று கடல் பச்சை நிறமாக மாறினால் மீன்கள் உயிரிழந்து விடும் என்று மீனவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே இந்த பச்சை நிற கடல் நீரை மத்திய அரசின் கடல் ஆராய்ச்சி …

பச்சை நிறமாக மாறிய கடல்; அச்சத்தில் மீனவர்கள்..! Read More »

சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஏழு பேர் படுகாயம்;

சேலம் மாவட்டம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். இந்த நிலையில் இவரது வீட்டில் இன்று அதிகாலை சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த மாணிக்கம், அவரது மனைவி ராஜேஸ்வரி, மற்றும் பிறந்து பத்து நாள் ஆன பச்சிளங்குழந்தை உட்பட ஏழுபேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விபத்து ஏற்பட்ட வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விபத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விபத்து குறித்து …

சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஏழு பேர் படுகாயம்; Read More »

திடீரென விழுந்த நீர் இடி; கோமுகி ஆற்றங்கரையோரம் வெள்ளப்பெருக்கு;

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். ஏற்கனவே கடந்த மாதங்களில் பெய்த மழையின் காரணமாக அணை 44 அடி நிரம்பியுள்ளதால் மதகுகள் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கல்வராயன் மலையில் கீழ் கோமுகி அணைக்கு வரும் நீர் பிடிப்பு பகுதிகளில் இரவு கன மழை கொட்டி தீர்த்ததால் நீர்வரத்து கோமுகி அணைக்கு அதிகரித்தது உள்ளது. அப்போது கோமுகி அணைக்கு …

திடீரென விழுந்த நீர் இடி; கோமுகி ஆற்றங்கரையோரம் வெள்ளப்பெருக்கு; Read More »