Mnadu News

நவராத்திரியின் முதல் நாளில் எப்படி வணங்க வேண்டும்?

செப்டம்பர் 26 நவராத்திரி பண்டிகையின் முதல் நாள் ஆகும். இந்த முதல் நாளில் நவசக்திகளில் ஒருவரான தாய் மகேஸ்வரி தேவியை பூஜித்து வணங்கி அவள் அருளைப் பெறக் கூடிய நாள். புரட்டாசி பிறந்தால் புது வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நவரா‌த்‌தி‌ரி நா‌ட்க‌ளி‌ல் ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அ‌ம்‌பிகை‌க்கு உகந்த நாளாக கருத‌ப்படு‌கிறது. முதல் நாளான இன்று தாய் மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு உக‌ந்த நா‌ளாக கருதப்பட்டு நவராத்திரியின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி என்றாலே அனைவருக்கும் புடித்தது கொலு தான். வரிசையாக கொலுவை அடுக்கி தினமும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். கொலு வைக்கப்படும் பூஜையறையில் அரிசி மாவால் புள்ளிக்கோலம் போட்டு, சந்தனம் தெளித்து மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

பிறகு கொலு படியில் வரிசையாக வைத்து வழிப்பட வேண்டும். மகேஸ்வரி அம்மன், மது கைடவர் என்ற அசுரனை அழித்த உருவத்தை வைத்து வழங்க வேண்டும். மல்லிகை, சிவப்புநிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்யவது இன்னும் சிறப்பாகும். வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டை, பருப்பு வடை போன்ற பொருட்களை நைவேத்தியம் செய்து வழிபடுவர்.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது.

Share this post with your friends