Mnadu News

வணிகம்

சொகுசு இல்லங்களுக்கு 14 சதவிகிதம் வரை உயர்ந்த மாத வாடகை

சென்னை, டெல்லி-என்சிஆர், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்,புனே ஆகிய 7 நகரங்களில் சொகுசு குடியிருப்புகளை விலைக்கு வாங்குவதற்கும் வாடகைக்கு எடுப்பதற்குமான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நகரங்களில் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட பகுதிகளில் 2 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட குடியிருப்புகளுக்கான சராசரி மாத வாடகை, குறிப்பாக கோட்டூர்புரத்தில தற்போது 14 சதவீதம் அதிகரித்து 84 ஆயிரம் ரூபாயாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

எஸ்பிஐ பத்திர வெளியீடு மூலம் 4 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டல்

ஒப்புறுதி பத்திரங்களை வெளியிட்டு 4 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனம் திரட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. பத்திர வெளியீடு குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,பேசல் 3 வகையைச் சேர்ந்த 2-ஆம் நிலை மூலதனத்துக்கான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்புறுதிப் பத்திரங்களை நிறுவனம் வெளியிட்டது என்றும். அந்தப் பத்திரங்களை வாங்க, ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் ஏறத்தாழ 5 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்ததாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1ரூபாய் குறைந்து 61 ரூபாய் 50 காசாக ஆக விற்பனை செய்யப்படுகிறது.