படுமோசமான நிதி நிலை:திவாலானது அமெரிக்க ‘சிலிக்கான் வேலி’ வங்கி.
அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கியின் படுமோசமான நிதி நிலையை அறிந்தனர்.அதையடுத்து, டெபாசிட்தாரர்கள் விரைந்து தங்களது பணத்தை எடுத்துக் கொண்டனர்.இதனால், சிலிக்கான் வேலி வங்கி திடீரென 48 மணி நேரத்தில் திவாலானது .அதையடுத்து, இந்த வங்கியின் முழுக் கட்டுப்பாட்டை அமெரிக்க பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் கீழ் கொண்டு வரப்பட்டது.அதனால் வங்கியின் பங்கு வர்த்தகம் 70 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியடைந்தது.