Mnadu News

இந்தியா

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பார்க்கலாம். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் …

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி. Read More »

அல்லாவே ராமரை அனுப்பி வைத்தார்: ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை.

காஷ்மீரின் உத்தம்பூர் நகரில், பேசிய தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா ,நான் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கடவுள் ராமர் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை. அவர் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மற்றவர்களுக்கும் உரித்தானவர். அதேபோல்தான் அல்லாவும் முஸ்லிம்களுக்கான கடவுள் மட்டுமே அல்ல. அவரும் அனைவருக்குமான கடவுள்.பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி எழுத்தாளர் ஒருவர் இதனைக் கூறியிருக்கிறார். அவர் அண்மையில்தான் காலமானார். அவர் தன்னுடைய …

அல்லாவே ராமரை அனுப்பி வைத்தார்: ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை. Read More »

சத்தீஸ்கரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு.

சத்தீஸ்கரின், அம்பிகாபூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3 புள்ளி ஒன்பது ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை:காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்,கைது.

கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.கர்நாடகாவின் கோலாறில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.இதனை …

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை:காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்,கைது. Read More »

புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி விசாரணை

சிபிஐ, அமலாக்க துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரிய நிகழ்வில் தி.மு.க., ரஷ்டிரீய ஜனதா தளம், பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வழக்குரைஞர் சிங்வி ஆஜரானார். தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இந்த மனு ஏப்ரல் 5ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் …

புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி விசாரணை Read More »

மத்திய பிரதேசத்தில் நிலநடுக்கம்:ரிக்டரில் 4.0 ஆக பதிவு.

.இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.மத்தியப் பிரதேசம், குவாலியருக்கு தென்கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில்இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மத்தியரசை வலியுறுத்தி புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம்: ரங்கசாமி உறுதி.

இந்தாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டை கடந்த மார்ச் 13ஆம் தேதி புதுவை முதல் அமைச்சரும் நிதித்துறையைக் கைவசம் வைத்திருப்பவருமான ரங்கசாமி தாக்கல் செய்தார். அதில் கேஸ் சிலிண்டர் மானியம், பெண் குழந்தைகளுக்கு வைப்பு நிதி என்று பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. இப்போது புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதமும் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்களின் பதிலும் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் திமுக உறுப்பினர் அனிபால் கென்னடி கேள்விக்கு முதல் அமைச்சர் …

மத்தியரசை வலியுறுத்தி புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம்: ரங்கசாமி உறுதி. Read More »

பிணையில் விடுக்கப்பட்ட ராகுல் காந்தி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு.

சூரத் நீதிமன்றத்தில் 2ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பிணையில் விடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ரவி சந்திப்பு: ஆக்கப்பூர்வ சந்திப்பு என ஆளுநர் மாளிகை தகவல்.

தமிழக சட்டசபையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்வதற்கான மசோதா ஒரு மனதாக மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி டெல்லி சென்றார். அவருடன் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அங்கு அவர் மத்திய அமைச்சர்களை சந்திப்பார் எனக்கூறப்பட்டது. தேவைப்பட்டால், பிரதமர் மோடியையும் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமான வகையில் இருந்ததாக …

உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ரவி சந்திப்பு: ஆக்கப்பூர்வ சந்திப்பு என ஆளுநர் மாளிகை தகவல். Read More »

ஆயுதங்களை விட வார்த்தைகள் ஆபத்தானவை: ராஜ்நாத் பதிலடி.

ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,ஆயுதங்களால் ஏற்படும் காயத்தை விட, வார்த்தைகளால் ஏற்படும் காயம் ஆழமாக இருக்கும் என்பதை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும். தீர்ப்பின் மூலம் அனைவரும் பாடம் படித்து கொள்வதுடன், பொது வெளியில் பேசும் போது எல்லை தாண்டக்கூடாது எனக் கூறியுள்ளார.ராகுல் வழக்கில் தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த காங்., தலைவர் மல்லிகார்ஜூ கார்கே, நீதிபதிகள் அடிக்கடி மாற்றப்பட்டனர் எனக்கூறியிருந்தார்.தீர்ப்பு குறித்தும், கார்கே கருத்து குறித்தும் …

ஆயுதங்களை விட வார்த்தைகள் ஆபத்தானவை: ராஜ்நாத் பதிலடி. Read More »