முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி முடங்கியுள்ளது. லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரத்தை முன்வைத்து ஆளுங்கட்சியினரும் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி எதிர்க்கட்சியினரும் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் ஏப்ரல் 3ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.