Mnadu News

தமிழ்நாடு

உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம்-செசன்சு நீதிமன்றம் தொடக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் நடந்தது.உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்றம் கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.அதையடுத்து, மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம்-செசன்சு நீதிமன்றங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, மயிலாடுதுறை தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு …

உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில் அமைக்கவும்: தலைமைநீதிபதியிடம்முதல்அமைச்சர் கோரிக்கை. Read More »

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைப்பு.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இதையடுத்து, அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த தவறினால் அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மார்ச் 31ஆம் தேதிக்குள் வரியினை செலுத்த தவறினால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், நீண்ட நாட்களாக செலுத்தாத இடங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ராகுல் காந்திக்கு மட்டும் இந்திய நாட்டில் தனிச்சட்டம் கிடையாது: அண்ணாமலை கருத்து.

தூத்துக்குடியில் நடந்த பாஜக செயல்வீர்ரகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை,”ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் அது பொருந்தும்”. அவருக்கு மட்டும் தனிச்சட்டம் இந்திய நாட்டில் கிடையாது. சட்டத்தின் அடிப்படையில் 30 நாள் மேல்முறையீட்டுக்கு உள்ளது. அவர் மேல்முறையீடு செய்யலாம். உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெறலாம். அதற்கான அனைத்து வழிமுறைகளும் உள்ளன. என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை ராஜாஜி பூங்காவின் நிலை:அறிக்கை தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

மதுரை ராஜாஜி பூங்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி முறையாக பராமரிக்கக் கோரி மதுரையை சேர்ந்த பொழிலன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, மதுரையில் உள்ள எக்கோ பார்க், ராஜாஜி பூங்காவின் நிலை குறித்து ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் நிலை அறிக்கை தர உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம்.

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தால் தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே தகுதி நீக்க நடவடிக்கை என்றும் ராகுல் காந்தி மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறாமல் கேள்வி கேட்டவரை அப்புறப்படுத்தும் அழகல்ல. ராகுல் காந்தி மீதான நடவடிக்கை என்பது முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று, நிலச்சரிவுகள், பூகம்பம், இரசாயன தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், அணுமின் நிலையங்கள், கதிர் வீச்சுகள் போன்ற பல்வகை பேரிடர்களை கையாளுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்த தமிழக பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கையின் முக்கிய அம்சங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு .

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 24.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், …

4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு . Read More »

வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை கோரிய மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

வேங்கைவயல் விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கேட்ட மார்ஸ்க் ரவீந்திரன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் இருக்கும் போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூய்மைப் பணியாளர் விஷம் குடித்து உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுக்காலனி பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் சுடலைமாடன் (வயது 56). இவர் உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தங்கம்மாள். சுடலைமாடனை முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி, தற்போதைய செயல் அலுவலர் பாபு ஆகியோர் சாதியை சொல்லி அவதூறாக பேசியதாகவும், பணி நிரந்தரம் செய்ய பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த சுடலைமாடன் கடந்த 17 ஆம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் …

தூய்மைப் பணியாளர் விஷம் குடித்து உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம். Read More »