Mnadu News

தமிழ்நாடு

தேர்தல் களத்தில் மீண்டும் விஜயகாந்த் – விஜயபிரபாகரன்

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சிச் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட விஜய பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது நாம் யார் என்பதை விஜயகாந்த் வழியில் காட்ட வேண்டும் எனவும் துரைமுருகன் தேமுதிகப் பற்றி கூறியதால் தேமுதிக மீதான திருஷ்டி கழிக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளுக்கு விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையத்தை நாடுகிறது திமுக

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு விலக்காக மற்ற 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் கட்டாயம் இருக்கும். மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரத்தில் அமமுகவின் கை ஓங்கும் என்ற பயத்தில் இந்த 3 தொகுதிகளில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக யூகிக்கப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெற்ற திமுக …

18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையத்தை நாடுகிறது திமுக Read More »

கூட்டணி இழுபறிக்கு மத்தியில் மோடி சென்னை வருகை

நாடளுமன்றத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் இந்தச் சமயத்தில் தேசியக் கட்சித் தலைவர்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னையில் மோடி இன்று கலந்து கொண்டு பேசுகிறார். கூட்டம் நடக்க இருக்கிற இடங்களை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு நடத்தினார்.  அதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு அதியசங்கள் கட்டாயம் நடக்கும் என பதிலளித்துள்ளார். அதிக இடங்களை தேமுதிக நிர்பந்திப்பதால் கூட்டணி இழுபறியில் இருக்கிறது. ஒருபுறம் மோடி …

கூட்டணி இழுபறிக்கு மத்தியில் மோடி சென்னை வருகை Read More »

ராமேஸ்வரத்தில் மாசி மஹா சிவராத்திரி தோரோட்டம்

ராமேஸ்வரத்தில் மாசி மஹா சிவராத்திரி தோரோட்டம் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். நாளை சிவாமி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மஹா சிவராத்திரி தோராட்டம் இன்று நடைபெற்றது வெளிமாநில பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர் தீர்தம் மூர்த்தி தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியத்திருத்தலம் காசிக்கு நிகரானது இத்திருத்தலத்தில் கடந்த மாதம் 25ந் தேதி கொடியேற்றத்துடன் மாசி மஹா சிவராத்திரி திருவிழா துவங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான   இன்று …

ராமேஸ்வரத்தில் மாசி மஹா சிவராத்திரி தோரோட்டம் Read More »

மீன்வளங்களை அழிக்காமல் இருக்க புதிய வலை அறிமுகம்

மீன் வளங்களை அழிக்காமல், மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என சதுரகன்னி தூர்மடி வலைகளை அறிமுகப்படுத்தி, மத்திய கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியக் கடலில் மீன்பிடிக்கும்   தமிழக மீனவர்கள் மீன் வளங்களை பாதுகாக்க சதுரகன்னி தூர்மடி வலைகளை பயன்படுத்த வேண்டுமென, மத்திய கடல் பொருள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தமிழக கடலோர நெடுகிலும் உள்ள மீனவர்கள் முக்கோணக்கன்னி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் சிறு குஞ்சுகள் வலைகளில் சிக்கி …

மீன்வளங்களை அழிக்காமல் இருக்க புதிய வலை அறிமுகம் Read More »

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு : 7 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் கோவிலூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோவிலூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.  விழாவினையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது . இதைத் தொடர்ந்து இன்று கோவிலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை  புதுக்கோட்டை மாவட்ட  ஆர். டி .ஓ சிவகுமாரி தொடங்கி வைத்தார். போட்டியில் 700  காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் …

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு : 7 பேர் காயம் Read More »

அதிமுக தலைமையிலான பாஜக அணி 40 தொகுதிகளிலும் வெல்லும்

அகில பாரத இந்து மகா சபா கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாநிலத்தலைவர் டாக்டர். ஏ.சுபாஸ் சுவாமி நாதன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எதிர் வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு முழுமையான ஆதரவு அளிப்பது எனவும்,  கூட்டணியின் வெற்றிக்கு தமிழகம் முழுவதும் …

அதிமுக தலைமையிலான பாஜக அணி 40 தொகுதிகளிலும் வெல்லும் Read More »

செய்யாற்றில் குறுக்கணை திறப்பு : மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் அடுத்த வெங்கசேரி அருகே செய்யாற்றில் குறுக்கே 8 கோடி மதிப்பில் தடுப்பணையைக் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், வெங்கச்சேரி கிராமம் அருகில் செய்யாற்றின் குறுக்கே வெங்கச்சேரியில் ரூ.80000 இலட்சம் மதிப்பீட்டில் நிலத்தடி நீரினை செறிவூட்டவும் அருகில் உள்ள கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் இத்தடுப்பணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தடுப்பணை பணியானது 07.12.2017-ல் தொடங்கப்பட்டு தற்பொழுது பணிகள் …

செய்யாற்றில் குறுக்கணை திறப்பு : மக்கள் மகிழ்ச்சி Read More »

பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் கொலை மிரட்டல் : வாலிபர் கைது

தஞ்சையில் பெட்ரோல் போட்டதற்கு  பணம் கேட்ட ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சை மானோஜிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த அன்பு இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில்  டிரைவராக  வேலை பார்க்கிறார். சில நேரங்களில் அங்கு பெட்ரோல் நிரப்பும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அங்கு   மானோஜிப்பட்டி ஐயன் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சந்திரகுமார் …

பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் கொலை மிரட்டல் : வாலிபர் கைது Read More »

சத்துணவுப் பணியாளர்களுக்கு பேழை வழங்கல் – அமைச்சர் வெ. சரோஜா

இந்தியாவிலேயே தமிழகம், சத்துணவு திட்டம் செயல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு தரமான-சுகாதாரமான உணவுகளை அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் 43 ஆயிரம் மையங்களில், சத்துணவு மையப் பணியாளர்களுக்கு ரூ. 1.73 கோடி மதிப்பிலான சுகாதாரப் பேழைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முறையாக சத்துணவு மையப் பணியாளர்களுக்கு சுகாதாரப் பேழை வழங்கும் திட்டத்தைத் நாமக்கல்லில் இன்று தொடங்கி வைத்து மாநில சமூக நலம்–சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேச்சு. தமிழக அரசின் சமூக …

சத்துணவுப் பணியாளர்களுக்கு பேழை வழங்கல் – அமைச்சர் வெ. சரோஜா Read More »