Mnadu News

உலகம்

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும்:புதினிடம் கூறிய ஜி ஜின்பிங் – வைரல் வீடியோ.

சீன அதிபர் ஜி ஜின்பிங், 3 நாட்கள் பயணமாக இந்த வாரம் ரஷ்யா வந்திருந்தார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இரு நாட்டு வணிக உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினர்.அதோடு, சந்திப்பு குறித்து புதின் கூறும்போது, “சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. …

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரும்:புதினிடம் கூறிய ஜி ஜின்பிங் – வைரல் வீடியோ. Read More »

சாக்லேட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் பலி,9 பேர் மாயம்.

அமெரிக்காவின் பெல்சின்வேனியா மாகாணம் மேற்கு ரீடிங் பாரோ பகுதியில் சாக்லேட் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.இந்த வெடிவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதோடு, 9 பேர் காணவில்லை;.இவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வெடிவிபத்தால் சாக்லேட் தொழிற்சாலை நிலைகுலைந்ததால் காணமால் போனோர்; கட்டிட …

சாக்லேட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 2 பேர் பலி,9 பேர் மாயம். Read More »

பணம் செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக்குகள் ஏப்ரல் 1-ல் நீக்கம்: நிறுவனம் முடிவு.

ட்விட்டரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பணம் செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் குறியீடுகள் அகற்றபப்டும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த வெரிஃபைடு ப்ளூ டிக் தொடர்ந்து வேண்டுமானால் பயனாளர்கள் சந்தாதாரர்களாக மாற வேண்டும் எனவும் ட்விட்டர் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இனி உறுதிப்படுத்தபட்ட ப்ளூ டிக் சேவை வேண்டும் என்றால் ட்விட்டர் பயனாளர்கள் மாதம் கட்டணம் செலுத்தி ட்விட்டர் ப்ளூ சேவையை பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக டிக் டாக் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க மக்களை உளவு பார்த்து அமெரிக்க நாட்டை பற்றிய ரகசிய தகவல்களை சீனா அரசுக்கு டிக் டாக் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் அரசு துறையில் பணி செய்பவர்கள டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் டிக் டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் …

அமெரிக்கர்களை உளவு பார்க்கவில்லை: நாடாளுமன்றக் குழு முன்பு டிக்டாக் சிஇஓ விளக்கம். Read More »

சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை செய்த வட கொரியா: பதற்றத்தில் கொரிய தீபகற்பம்.

வட கொரியாவின் தென் பகுதியில் உள்ள ஹம்க்யோங் மாகாணத்தில் கடலுக்கு அடியில் ரகசிய ஆயுதத்தை செலுத்தி வட கொரிய ராணுவம் வெடிக்க வைத்தது. அதனால்; ஏற்பட்ட ரேடியோ ஆக்டிவ் அலைகள் மூலம் சுனாமி ஏற்பட்டது. இந்தச் சோதனை வெற்றியடைந்தற்கு வட கொரிய அதிபர் கிம் மகிழ்ச்சி தெரிவித்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் இந்த பரிசோதனை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழை.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி,கனமழையால் 3 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 கோடியே 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி காற்று மற்றும் கனமழையால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின் இணைப்புகளும் பரவலாக சேதமடைந்தன. கனமழையால் 3 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கான மின் …

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி, கனமழை. Read More »

பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி கூறும்போது, “ போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். உரையாடலுக்கு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு.

தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிவோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 புள்ளி ஆறு கிலோ மீட்டர் ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5 புள்ளி ஒன்பது ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளம் போனஸ்: தைவான் நிறுவனம் அசத்தல்.

தைவானைச் சேர்ந்த மிகப்பெரிய சரக்குகளை கையாளும் தனியார் நிறுவனம், தனது 3,100 ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளத்தை போனஸாக கொடுக்கிறது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது ஊழியர்களுக்கு 52 மாத ஊதியத்தை போனஸாக அளித்து அசத்திய இந்த நிறுவனம், 2022ஆம் ஆண்டில் இவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக 10 முதல் 11 மாத ஊதியத்தை வழங்க முன் வந்துள்ளது.இதன் மூலம், இந்த சரக்குகளை கையாளும் நிறுவனம் 2022ஆம் ஆண்டுக்காக, ஊழியர்களுக்கு வழங்கியிருப்பது 5 ஆண்டு ஊதியத்துக்கும் அதிகமாகும் என்கின்றன …

ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டு சம்பளம் போனஸ்: தைவான் நிறுவனம் அசத்தல். Read More »

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: ரஷ்ய அதிபர் புதின் பேச்சு.

சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்த சந்திப்பில் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையில் உக்ரைன் உடனான ரஷ்யாவின் போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இதுகுறித்து புதின் கூறும்போது, “சீனா உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத்தான் முயற்சி செய்கிறது. இவ்விவகாரத்தில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா இருக்கிறது. உக்ரைனுடனான எங்கள் மோதலில் சீனா பாரபட்சமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது ஆனால் போரை நிறுத்த …

வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: ரஷ்ய அதிபர் புதின் பேச்சு. Read More »