Mnadu News

விளையாட்டு

சென்னையில் விற்று தீர்ந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள்.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-ஆஸிதிரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி சில மணி நேரங்களிலேயே ,சி-டி-இ கேலரிகளுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. ஏற்கனவே ஆன்லைனில் 30ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ள நிலையில் கவுண்டர்களில் 5ஆயிரத்து 100 டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

சென்னையில் தோனி: இளம் வீரர்களுடன் பயிற்சியை தொடங்கினார்.

மகளிர் ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி முடிவடையும் நிலையில் நான்கு நாட்கள் இடைவெளியில் ஆடவர் ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் …

சென்னையில் தோனி: இளம் வீரர்களுடன் பயிற்சியை தொடங்கினார். Read More »

டெண்டுல்கருக்கு சிலை வைக்கப்படும்: மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே அறிவிப்பு.

மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது சச்சின் சிலை திறக்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமோல் காலே தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி:ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவிப்பு.

இந்திய அணிக்காக 2008 முதல் 61 டெஸ்டுகள், 17 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் முரளி விஜய். டெஸ்டில் 12 சதங்கள், 15 அரை சதங்களுடன் 3982 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்காகக் கடைசியாக 2018-ல் பெர்த் டெஸ்டில் விளையாடினார். தமிழ்நாடு அணிக்காகக் கடைசியாக 2019-ம் ஆண்டிலும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2020-ம் ஆண்டிலும் விளையாடினார். அதன்பிறகு தொழில்முறை கிரிக்கெட்டில் அவர் பங்கேற்கவில்லை.இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள முரளி …

சர்வதேச கிரிக்கெட் போட்டி:ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவிப்பு. Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச் சாம்பியன்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 10-ஆவது முறையாக கோப்பை வென்றிருக்கும் அவர், இப்போட்டியில் அதிகமுறை பட்டம் வென்றவராக முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும், 22-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடாலின் சாதனையையும் சமன் செய்திருக்கிறார். தற்போது ஆடவர் ஒற்றையரில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களாக இவர்கள் இருவர் மட்டுமே உள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறினார். அரையிறுதியில் அமெரிக்காவின் டாமி பாலை 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வீழ்த்தினார்.

இந்தியாவை சேர்ந்த மாணவர் 78 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்!

செஸ் போட்டிகளில் கிராண்ட்மாஸ்டர் என்ற உயரிய நிலையை எட்டுவதற்கு குறிப்பிட்ட தரவரிசை ரேட்டிங் புள்ளியை கடக்க வேண்டும். அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கோஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78 வது கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்துக்கு உரியவராக மாறி உள்ளார். 59 வது தேசிய சீனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் மித்ரபாவுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி டிரா செய்ததன் மூலம் கிராண்ட்மாஸ்டருக்குரிய கடைசி தகுதி நிலையை அவர் எட்டினார். மேற்கு வங்காளத்தில் இருந்து உருவெடுத்த …

இந்தியாவை சேர்ந்த மாணவர் 78 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்! Read More »

பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சேதி ட்விட்டரில், ரமீஸ் ராஜா தலைமையிலான கிரிக்கெட் ஆட்சி இனி இல்லை. …

பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம். Read More »

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்ற மீராபாய் சானு.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, கொலம்பியாவில் நடைபெறும் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று ஒட்டுமொத்தமாக 200 கிலோ எடை தூக்கிய மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கமும் 206 கிலோ எடை தூக்கிய சீன வீராங்கனை ஜியாங்குக்குத் தங்கப் பதக்கமும் கிடைத்தன.2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய், இம்முறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2019 போட்டியில் 4-வது இடம் பிடித்தார். இந்த …

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்ற மீராபாய் சானு. Read More »

ஃபிஃபா உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோன்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன், ஷாருக் கான் மற்றும் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து ‘பதான்’ படத்தில் நடித்திருக்கிறார். ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சனுடனான ’புராஜெக்ட் கே’, கணவர் ரண்வீர் சிங்கின் ’சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களிலும் தீபிகா நடித்து வருகிறார்.தீபிகா படுகோனின் தந்தை பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோன். இந்தியாவிலும் பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் வாகை சூடியிருக்கும் …

ஃபிஃபா உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோன். Read More »