Mnadu News

TOP TAMIL NEWS

இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்பு

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது .இந்நிலையில் தேர்தல் முடிவில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரா குமார திசநாயகே முன்னணி வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.இதனை தொடர்ந்து எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் இரண்டாவது இடத்தையும் அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-வது இடத்தையும் பிடித்தனர் இந்நிலையில் இலங்கையின் 9-வது அதிபராக அனுரா குமார திசநாயகே இன்று காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் …

இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகே பதவியேற்பு Read More »

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல் இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் கிடைத்துள்ளதாகவும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27-ம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த …

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு Read More »

பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன், வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் ஏற்கவே இரண்டு பதக்கங்களை வென்று மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்,தன் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தடகள வீரர் மாரியப்பனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.மேலும் தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை திறந்தவெளி வாகனத்தில் சென்ற மாரியப்பனை, ஊர்மக்கள் வாழ்த்தினர்.இதற்கிடையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி மலர்க்கொத்து கொடுத்து …

பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு Read More »

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”

திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில் சென்னையில் நடந்த தி.மு.க. பவள விழாவில் பேசிய முன்னாள் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடுத்த 10 நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.இதனால் தி.மு.க தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பில் …

“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்” Read More »

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஒப்புதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முன்மொழிவு நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்றும் இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாதது என்றும் தனது …

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு Read More »

புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நேபிடோவ், தென்சீனக் கடலில் உருவாகிய புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்த நிலையில் 77 பேர் காணாமல் போயுள்ளனர்.மேலும் வியட்நாமில் 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் …

புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு Read More »

மோடியை சந்திக்க மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இதற்காக முதலமைச்சர் நேரம் கேட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தரப்பில் இருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.இந்நிலையில் நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாளை மறுநாள் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் …

மோடியை சந்திக்க மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளார் Read More »

நியூயார்க்கில் இந்து கோயில் மீது தாக்குதல்

அமெரிக்காவின் நியூயார்க்கில் ராபின்ஸ்வில்லி நகரில் சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. உலகின் 2வது மிகப்பெரிய கோவில் என்னும் சிறப்பை பெற்ற இக்கோயிலை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இதனை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த செயலுக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள்,முதலமைச்சர்கள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள் உள்பட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்

ஓணம் பண்டியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் உலகெங்கிலும் உள்ள எனது மலையாளி சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துகள் என்றும் இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையையும் வாழ்வையும் பிரதிபலிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.