Mnadu News

இலங்கை

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர் படுகாயமடைந்தார். அவரை சக மீனவர்கள் மீட்டு நாகை மருத்துவமனையில் அனுமதித்தனர். மீனவர்களை கட்டையால் தாக்கி அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் …

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்! Read More »

இந்திய எதிர்ப்பு தளமாக இலங்கையை பயன்படுத்த மாட்டோம்: இலங்கை அதிபர் திட்டவட்டம்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரான்ஸ் அரசு ஊடகமான ‘பிரான்ஸ் 24’ செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,இலங்கை எப்போதும் நடுநிலை நாடாகவே திகழும். இந்தியாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு இலங்கை தளமாக பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கிறோம்.,கடந்த ஆயிரத்து 500 ஆண்டுகளாக சீனாவுடன் இலங்கைக்கு தொடர்பு உள்ளது. தற்போது வரை சீனாவின் ராணுவ படைத்தளம் ஏதும் இலங்கையில் அமையவில்லை. அதேபோல், சீனாவுடன் எவ்விதமான ராணுவ ஒப்பந்தத்திலும் …

இந்திய எதிர்ப்பு தளமாக இலங்கையை பயன்படுத்த மாட்டோம்: இலங்கை அதிபர் திட்டவட்டம். Read More »

கொழும்பு துறைமுகம்: ஒரே நேரத்தில் இந்திய பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் நிலை நிறுத்தம்.

இந்திய கடற்படையில் ‘வாகீர்’ என்ற நீர்முழ்கிக் கப்பல் உள்ளது. இது இந்திய கடற்படையின் புதிய உள்நாட்டு கால்வாரி பிரிவை சேர்ந்தது. “உலகளாவிய பெருங்கடல் வளையம்” என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினத்தை நினைவூட்ட் இந்த நீர்முழ்கிக் கப்பல் 5 நாள் பயணமாக இலங்கை கிளம்பியது. கொழும்பு துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.இந்நிலையில் பாகிஸ்தானின் கடற்படை கப்பலான ‘திப்பு சுல்தான்’ கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. இந்த கப்பல் 168 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. 2 நாட்கள் பயணமாக வந்துள்ளது.

அண்ணாமலை மற்றும் எல்.முருகன் இலங்கை பயணம்.

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் பயணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை புறப்பட்டு சென்றனர். இலங்கை பயணம் குறித்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், இலங்கை பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னை குறித்து …

அண்ணாமலை மற்றும் எல்.முருகன் இலங்கை பயணம். Read More »

மார்ச் மாதம் 3, 4 ஆம் தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா : இலங்கை அரசு அறிவிப்பு.

மார்ச் மாதம் 3, 4 ஆம் தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. கச்சத்தீவு திருவிழா குறித்து இலங்கையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கச்சத்தீவு திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்.

பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி: பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.

இலங்கை கொழும்பு – மட்டக்களப்பு இடையேயான ரயில் தடத்தில் நேற்று பயணிகள் ரயில் அதிகாலை 2 மணியளவில் வந்துகொண்டிருந்தது. அப்போது ரயில் தடத்தில் குறுக்கே வந்த யானைகள் மீது ரயில் மோதியது. இதில், 3 யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அதோடு, பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கொழும்பு-மட்டக்களப்பு இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் ரயில் பாதையை சரி செய்யும் பணியில் …

பயணிகள் ரயில் மோதி 3 யானைகள் பலி: பெட்டிகள் தடம் புரண்டு விபத்து. Read More »

ராமர் பாலம் வழக்கு: மத்திய அரசு பதில்தர உச்சநீதிமன்றம் அவகாசம்.

ராமர் பாலம் வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க பிப்ரவரி முதல்வாரம் வரை அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . தேசிய சின்னமாக அறிவிக்க கோரும் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு பிப்ரவரி 2வது வாரத்துக்கு ஒத்திவைக்க படுகிறது என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

எல்லையில் கடும் பனிமூட்டம்: ரோந்து பணிகள் தீவிரம்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆண்டு குளிர்காலத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. காலை நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் சூழ்வதால் பல்வேறு நெடுஞ்சாலைகளில் கோர விபத்துகள் நிகழ்ந்து வருகின்றது. இந்நிலையில், இந்திய – பாகிஸ்தான், இந்திய – சீன எல்லைகளில் கடுமையான பனிமூட்டமும், குளிரும் ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இந்த சூழலை பயன்படுத்தி பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து டிரோன்கள் மூலம் போதைப் பொருள்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் …

எல்லையில் கடும் பனிமூட்டம்: ரோந்து பணிகள் தீவிரம். Read More »

இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை! மர்ம நபர்கள் வெறிச்செயல்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில் 25 வெளிநாட்டினர் உள்பட 265 பேர் பலியாகினர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இப்பயங்கரவாத தாக்குலில் தொடர்புடையதாக கூறி இலங்கையின் மட்டக்குளியா நகரை சேர்ந்த 38 வயதான முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் …

இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை! மர்ம நபர்கள் வெறிச்செயல்! Read More »

14 தமிழக மீனவர்கள் விடுதலை.

கடந்த 14 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தற்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.