Mnadu News

TOP TAMIL NEWS

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இன்று இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. ஏதற்காக பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்பதற்கான பின்னணி இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், உள்நாட்டு சட்டங்களை மீறும் வகையில் கருத்துகள் இடம்பெற்றதால், மத்திய அரசு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று, டிவிட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரன்வீர் சிங்கை தீபிகா படுகோன் விவாகரத்து செய்வதாக தகவல்

தீபிகா ஹிந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோன்; ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கை; காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு; இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்;. சில மாதங்களாகவே கணவன் மனைவி உறவில் இடைவெளி அதிகமாகி உள்ளது என்று, கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரன்வீர் சிங் பதிவிட்ட புகைப்படத்திற்கு தீபிகா படுகோன், “சாப்பிடும்படி இருக்கிறாய்” என கமெண்ட் செய்துள்ளார். இதையடுத்து, ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனை விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி …

ரன்வீர் சிங்கை தீபிகா படுகோன் விவாகரத்து செய்வதாக தகவல் Read More »

பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடக்கிவைத்தார்

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார். அங்குள்ள கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தி தொடங்கிவைத்தார். அப்போது 5ஜி சேவையின் செயல்பாட்டை பிரதமர் மோடிக்கு சோதனையாக காண்பிக்கப்பட்டது. இந்த 5ஜி சேவை நாட்டின் முக்கிய நகரங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்படும். பின்னர், அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்தச் சேவையின் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உயர்வு 2035 -ஆம் ஆண்டில் …

பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடக்கிவைத்தார் Read More »

சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்துக்கு சீல்

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா , மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து , பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதிதத்து. இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் பணி நடந்து வருகிறது.

நாட்டில் குறையும் கொரோனா தொற்று

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 28 ஆயிரத்து 655 ஆக அதிகரித்துள்ளது. ,மேலும் 5 ஆயிரத்து 69 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 293 ஆக குறைந்துள்ளது. இதுவரையில் 4 கோடியே 40 …

நாட்டில் குறையும் கொரோனா தொற்று Read More »

ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை சோதனை

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று ஜப்பான் கடற்பகுதியில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியுள்ளது. இதற்கு ஜப்பான் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11 ஆயிரத்து 690 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர் மட்டம் 118 புள்ளி 75 அடியாகவும் நீர் இருப்பு 91 புள்ளி …

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு Read More »

ரயில் பயணத்தில் அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் திருச்சியில் இருந்து சென்னைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு ஏசி பெட்டியில் நேற்று இரவு பயணம் செய்துகொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில்வே போலீசார் அமைச்சரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்று சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார்

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ_க்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன. சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படமும், சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்றது. …

குடியரசுத் தலைவர் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் Read More »

யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ள சர்தார் பட டீஸர்!

தமிழ் சினிமாவின் நல்ல நடிகராக வளர்ந்துள்ள நடிகர் கார்த்தி. கமர்ஷியல் படங்களும் சரி, கதை முக்கியத்துவம் வாய்ந்த படங்களும் சரி எதுவானாலும் அதில் இறங்கி அடிப்பதில் இவர் கில்லாடி எனலாம். சமீப காலங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, சுல்தான்,பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஹிட் மேல் ஹிட் கொடுக்க. தனது அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அப்படி, இரும்புதிரை, ஹீரோ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ்.மித்ரன் உடன் கூட்டணி …

யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ள சர்தார் பட டீஸர்! Read More »