Mnadu News

TOP TAMIL NEWS

காபூல் கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலின் டேஷ்ட்-இ-பார்ச் பகுதியில் சிறுபான்மையினரான ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் பயிலும் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ,அப்போது, திடீரென நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 19 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அண்ணா பலகலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ஆயிரத்து 100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் தொழிற்சாலையை திறந்து வைத்து உiயாற்றிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது என்கிற அடிப்படையில்தான் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகுவதை ஊக்கப்படுத்தி வருகிறோம்.என்றார்.

நட்புரீதியான போட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதுபோல ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி என்பவரும் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், இந்தப் போட்டியில் நடுநிலை வகிப்பதாக நேரு குடும்பம் எனக்கு உறுதியளித்தது. அந்த உணர்வில்தான் நானும் வேட்புமனுவை முன்வைத்தேன். இது யாரையும் அவமதிப்பதற்காக அல்ல, நட்புரீதியான போட்டி. என்றார்

பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லாதது ஏன்? மீ டூ சர்ச்சை காரணமா? இயக்குனர் மணியின் நச் பதில்!

பொன்னியின் செல்வன் பாகம் 1 மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகி திரை அரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரின் கனவு படமான இதை மணி ரத்தினம் நிறைவேற்றியுள்ளார். ஆனால், இதில் கவிஞர் வைரமுத்து இடம்பெறாதது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வழக்கமாக ரஹ்மான் இசையில் வைரமுத்து தான் அனைத்து பாடல்களையும் எழுதுவார். ஆனால், இந்த படத்தில் சங்க இலக்கிய தமிழ் புலவர் ஒருவர் வேண்டுமென எழுத்தாளர் ஜெயமோகன் இடம் மணிரத்தினம் கேட்க அவர் ரெபர் …

பொன்னியின் செல்வனில் வைரமுத்து இல்லாதது ஏன்? மீ டூ சர்ச்சை காரணமா? இயக்குனர் மணியின் நச் பதில்! Read More »

லெப்பைகுடியிருப்பை கவனிப்பரா தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ,தன்னுடைய சொந்த ஊரான காவல்கிணறு ஊராட்சியில் ஒரு பகுதி நேர நியாயவிலைக்கடையை இன்று திறந்ததற்கு காவல்கிணறு ஊரை சுற்றி இத்தனை பேனர்களா என்று மக்கள் புலம்ப தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரம் இவர், தமிழக சபாநாயகராக பதவியேற்று 16 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான காவல்கிணறு ஊராட்சியில் அவர் செய்துள்ள நலத்திட்டபணிகள் என்னவென்று கூறமுடியுமா? ஏன்று கேள்வி எழுந்துள்ளது. . மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன், …

லெப்பைகுடியிருப்பை கவனிப்பரா தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு Read More »

உண்மையில் ரசிகர்களை திகிலில் உரைய வைத்ததா நானே வருவேன்?

“மயக்கம் என்ன” திரைப்படத்துக்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ” நானே வருவேன் “. தனுஷ் இரட்டை வேடங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர்களோடு நடித்த செல்வா, மனநல மருத்துவராக வரும் பிரபு, மனைவியாக வரும் இந்துஜா, குழந்தை கதாபாத்திரங்கள் என அனைத்தும் படத்துக்கு பலம் சேர்துள்ளன.யுவன் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் உலக தரம் என்றே சொல்ல வேண்டும். குழந்தை பருவத்தில் இருக்கும் போதே நாம் நமது …

உண்மையில் ரசிகர்களை திகிலில் உரைய வைத்ததா நானே வருவேன்? Read More »

தீராத லீக் சர்ச்சை! கசிந்த ஜெயிலர் பட அடுத்த புகைப்படம்! கடுப்பில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெற தவறியது என்றே சொல்ல வேண்டும். அதே போல நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் எதிர்பார்த்த வெற்றியை பூர்த்தி செய்ய தவறியது. இருவருக்குமே கட்டாய வெற்றி தேவைப்படும் சூழலில் நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கி வரும் படம் “ஜெயிலர்”. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 அன்று சென்னை ராயப்பேட்டையில் துவங்கியது. அங்கு படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இப்படத்தின் காட்சிகள் …

தீராத லீக் சர்ச்சை! கசிந்த ஜெயிலர் பட அடுத்த புகைப்படம்! கடுப்பில் படக்குழு! Read More »

பொங்கல் வெளியீட்டில் பல முறை வெற்றி கொடி நாட்டிய தளபதி விஜய்!

பண்டிகை காலங்களில் வரும் படங்கள் என்றாலே அது பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களாகவே இருக்கும். அப்படி, வருகிற படங்கள் எல்லா நடிகர்களுக்கும் கை கொடுப்பது இல்லை. ஆனால், ஒரு சில முன்னணி நடிகர்களுக்கு அந்த பண்டிகை கால படங்கள் தான் பெரும் வெற்றியை தேடி தந்துள்ளன. விஜய்யின் படங்கள் எல்லாம் ஹிட் ஆவது இல்லை. பல தோல்வி படங்களை அவர் தொடர்ந்து கொடுத்து வந்தாலும் பல படங்கள் அவர் பாதையை மாற்றி அமைத்துள்ளன என்றே சொல்ல வேண்டும். …

பொங்கல் வெளியீட்டில் பல முறை வெற்றி கொடி நாட்டிய தளபதி விஜய்! Read More »

பசி எடுத்தால் ஸ்பூன் போதும்! வினோத மனிதனுக்கு நேர்ந்த சோகம்!

உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர் பகுதியின் 32 வயது வாலிபர் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். மேலும் வயிற்று வலிக்கான மருந்துகள் சாப்பிட்டும் கொஞ்சம் கூட வலி குறையாததால் அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவர்கள் அவரின் வயிற்றை ஸ்கேன் செய்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அவரது வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏராளமான ஸ்பூன்கள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் விழி பிதுங்கி போயினர். மேலும், அந்த ஸ்பூன்களில் தலை, …

பசி எடுத்தால் ஸ்பூன் போதும்! வினோத மனிதனுக்கு நேர்ந்த சோகம்! Read More »