Mnadu News

TOP TAMIL NEWS

குடியரசுத் தலைவர் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார்

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷ_க்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன. சிறந்த துணை நடிகையாக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலியும், சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படமும், சிறந்த வசனத்துக்காக மண்டேலா படத்துக்காக மடோனா அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழா டெல்லியில் நடைபெற்றது. …

குடியரசுத் தலைவர் தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் Read More »

யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ள சர்தார் பட டீஸர்!

தமிழ் சினிமாவின் நல்ல நடிகராக வளர்ந்துள்ள நடிகர் கார்த்தி. கமர்ஷியல் படங்களும் சரி, கதை முக்கியத்துவம் வாய்ந்த படங்களும் சரி எதுவானாலும் அதில் இறங்கி அடிப்பதில் இவர் கில்லாடி எனலாம். சமீப காலங்களில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, சுல்தான்,பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் ஹிட் மேல் ஹிட் கொடுக்க. தனது அடுத்தடுத்த படங்களின் கதை தேர்வில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அப்படி, இரும்புதிரை, ஹீரோ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ்.மித்ரன் உடன் கூட்டணி …

யூடியூப்பில் டிரெண்ட் ஆகியுள்ள சர்தார் பட டீஸர்! Read More »

இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா நானே வருவேன்? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, பிரபு ஆகியோர் நடிப்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாஸிடிவ் விமர்சனங்களை அள்ளி வரும் படம்“நானே வருவேன்”. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் பேசப்பட்டு வருகிறது. அதே போல படத்தின் கதை, ஒளிப்பதிவு என அனைத்தையும் கச்சிதமாக கலந்து கொடுத்துள்ளது படக்குழு. தற்போது, படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. பெரிய புரொமோஷன் செய்யாத நிலையிலும் படத்துக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் …

இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா நானே வருவேன்? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிபோர்ட்! Read More »

5ஜி சேவை இன்று துவக்கம்! பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்!

அலைபேசி பயன்படுத்தும் அனைவருக்குமே இன்று இணைய சேவை முற்றிலும் முக்கியமான ஒன்றாக ஆகிவிட்டது என்று சொல்ல வேண்டும். தற்போது, 4 ஜி பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு இன்னும் இணையத்தின் வேகம் தேவைப்படுவதால் அதை தர பலதொலைதொடர்புச் சேவை நிறுவனங்கள் தங்களை ஆயத்தம் ஆக்கி வருகின்றன.இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் ‘5ஜி’ என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஜி வசதியை தொலைதொடர்புச் சேவை நிறுவனங்கள் தருவதன் மூலம் அதிவேக இணையதள வசதியை வாடிக்கையாளர்கள் …

5ஜி சேவை இன்று துவக்கம்! பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்! Read More »

ஜனநாயகத்தின்; கதவுகள் அடைக்கப்படும்போது யாத்திரைதான் ஒரே வழி: ராகுல் காந்தி பேச்சு

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் தமிழகத்தின் கூடலூர் பகுதியில் இருந்து கர்நாடக சென்றுள்ளது. அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி ,நாட்டில் ஜனநாயக முறையிலான அமைப்புகள் நிறைய உள்ளன. நாடாளுமன்றம் மற்றும் ஊடகங்கள் உள்ளன. ஆனால், அவற்றின் கதவுகள் எதிர்க்கட்சிகளுக்கு திறக்கப்படவில்லை. ஊடகங்கள் எங்களது குரலுக்கு கவனம் கொடுக்கவில்லை. அனைத்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இது போன்ற சூழலில் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். எந்த …

ஜனநாயகத்தின்; கதவுகள் அடைக்கப்படும்போது யாத்திரைதான் ஒரே வழி: ராகுல் காந்தி பேச்சு Read More »

நவம்பர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரியிருந்தனர். நிபந்தனைகளுடன் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ,சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி காவல்துறை ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது. ,இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு வருகிற நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு;, மீண்டும் அனுமதி மறுத்தால் நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உயர்நீதிமன்றம் …

நவம்பர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி Read More »

காபூல் கல்வி மையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மேற்கு காபூலின் டேஷ்ட்-இ-பார்ச் பகுதியில் சிறுபான்மையினரான ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் பயிலும் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர். ,அப்போது, திடீரென நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 19 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர்.

பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விடுமுறை அண்ணா பலகலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 3 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 8 ஆம் தேதி கல்லூரிகள் வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறோம்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா சிட்டியில் ஆயிரத்து 100 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பெகாட்ரான் தொழிற்சாலையை திறந்து வைத்து உiயாற்றிய முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது என்கிற அடிப்படையில்தான் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகுவதை ஊக்கப்படுத்தி வருகிறோம்.என்றார்.

நட்புரீதியான போட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதுபோல ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் கே.என். திரிபாதி என்பவரும் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், இந்தப் போட்டியில் நடுநிலை வகிப்பதாக நேரு குடும்பம் எனக்கு உறுதியளித்தது. அந்த உணர்வில்தான் நானும் வேட்புமனுவை முன்வைத்தேன். இது யாரையும் அவமதிப்பதற்காக அல்ல, நட்புரீதியான போட்டி. என்றார்