Mnadu News

TOP TAMIL NEWS

முறைப்படி ரஷ்யாவுடன் உக்ரைனின் 4 பிராந்தியங்கள் இணைப்பு

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம. 25 ஆம் தேதி; போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு தன்னுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டது.இந்நிலையில் இந்தப் பிராந்தியங்களில் மக்களின் கருத்துகளை கேட்கும் ஓட்டெடுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் ரஷ்யாவுடன் இணைய இந்த பிராந்தியங்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் …

முறைப்படி ரஷ்யாவுடன் உக்ரைனின் 4 பிராந்தியங்கள் இணைப்பு Read More »

காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட முடியாமல் திணறும் வனத்துறையினர்

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மருதமலை வனப் பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. அவ்வப்போது யானைகள், குடியிருப்புப் பகுதிக்குள் வருவது வழக்கம். கடந்த வாரங்களில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகளில் புகுந்து அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில், இன்று பாரதியார் பல்கலைக்கழக பின்புற வளாகத்துக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டு வந்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ …

காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட முடியாமல் திணறும் வனத்துறையினர் Read More »

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய இன்று வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2023 டிசம்பருக்குள் அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்கும் முகேஷ் அம்பானி அறிவிப்பு

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6-ஆவது இந்திய கைப்பேசி மாநாட்டில், அதிவேக அலைக்கற்றைத் திறன் கொண்ட ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைத்தார். ,இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி , தொடக்கத்தில் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு மெட்ரோ நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது என்றார். எனினும், வரும் 2023ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவில் உள்ள …

2023 டிசம்பருக்குள் அனைவருக்கும் 5ஜி சேவை கிடைக்கும் முகேஷ் அம்பானி அறிவிப்பு Read More »

காங்கிரசின் பினாமி தலைவராகவே மல்லிகார்ஜூன் கார்கே இருப்பார்

நேரு-காந்தி குடும்பத்தினர் ஆதரவை அசோக் கெலாட் இழந்ததைத் தொடர்ந்து, ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படும் பினாமி வேட்பாளராக 80 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியுள்ளார். இதனை நியாயமான, சுதந்திரமான நடைமுறை என்று கூறினால் யாரும் நம்ப மாட்டாhர்கள்” என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாவத் பூனாவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரிசி, கோதுமை, ஆட்டாவின் விலை 19 சதவிகிதம் அதிகரிப்பு

கடந்த ஓர் ஆண்டில் அரிசி, கோதுமை மற்றும் ஆட்டா ஆகியவற்றின் விலை 8 முதல் 19 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஆட்டா அல்லது கோதுமை மாவின் விலை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 36 ரூபாய் ஆக இருந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் 19 சதவிகிதம் அதிகமாகும்.. இதேபோல அரிசியின் சராசரி சில்லறை விலை ஒரு கிலோ 38 ரூபாயாக உயர்ந்துள்ளது. …

அரிசி, கோதுமை, ஆட்டாவின் விலை 19 சதவிகிதம் அதிகரிப்பு Read More »

இரானி கோப்பையில் சாய் கிஷோருக்கு அணியில் இடமில்லை

ராஜ்கோட்டில் இன்று முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா – ரஞ்சி சாம்பியன் சௌராஷ்டிரம் ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ஜெயிஸ்வால், பிரியங்க் பஞ்சல், சாய் கிஷோர் ஆகிய முக்கிய வீரர்கள் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் இடம்பெறவில்லை.

6 வினாடிகள்.. தரைமட்டமாகும் சாந்தினி சௌக் பாலம்

மும்பை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்திருக்கும் மிக முக்கிய சந்திப்பு சாந்தினி சௌக் பகுதியாகும். இந்தப் பாலத்தைக் கடந்துதான் புனேவிலிருந்து செல்ல முடியும். இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பழைய பாலத்தை இடித்துவிட்டு அங்கு புதிய அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதையடுத்து, பழைய பாலத்தில் 1300 துளைகள் இடப்பட்டு, அதில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டுள்ளன. நாளை அதிகாலை 2 மணியளவில், வெடிபொருள்கள் மூலம் பாலம் தகர்க்கப்படவிருக்கிறது. அதையொட்டி, இப்பகுதியில் இன்று நள்ளிரவு …

6 வினாடிகள்.. தரைமட்டமாகும் சாந்தினி சௌக் பாலம் Read More »

சிகிச்சை முடிந்து அமைச்சர் மெய்யநாதன் சென்னை திரும்பினார்.

ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அமைச்சர் மெய்யநாதன் நேற்று சென்னைக்கு பயணம் செய்தார். புதுக்கோட்டை ரயில் பயணத்தின் போது ரத்த அழுத்தம் காரணமாக அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கிய அமைச்சர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தற்போது அமைச்சர் நலமுடன் இருப்பதால் அவர் சென்னை திரும்பி உள்ளார்.